மக்களவை தேர்தல்: 29 தொகுதிகளிலும் வெற்றி தான்..! முன்னாள் முதல் மந்திரி உறுதி! - Seithipunal
Seithipunal


வருகின்ற மக்களவைத் தேர்தலுக்கான 195 வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியலை நேற்று பா.ஜ.க வெளியிட்டது. அதில், மத்திய பிரதேச மாநிலத்திற்கு 24 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். 

முன்னாள் முதல் மந்திரியான சிவராஜ் சிங், விதிஷா தொகுதியில் போட்டியிட உள்ளார். இவர் ஏற்கனவே விதிஷா தொகுதியில் போட்டியிட்டு நான்கு முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தற்போது ஐந்தாவது முறையாக அதே தொகுதியில் போட்டியிட உள்ளார். 

இதே தொகுதிகள் தான் கடந்த 1996 ஆம் ஆண்டு வாஜ்பாய் வெற்றி பெற்றார். இந்நிலையில் மத்தியபிரதேசத்தில் உள்ள 29 தொகுதிகளிலும் பா.ஜ.க வெற்றி பெறும் என சிவராஜ் சிங் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பிரதேச மக்களின் மனதில் உள்ளார். இதனால் பா.ஜ.க 29 தொகுதிகளிலும் வெற்றி பெறும். 

மேலும் நாடு முழுவதும் 400 தொகுதிகளில் வெற்றி பெறுவதை பா.ஜ.க இலக்காக கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shivraj Singh Chauhan contest vidisha seat


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->