இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி.!  - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் ஒரு லட்சத்து இருபத்தைந்து ஆயிரம் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். அதே சமயம், இந்த புற்றுநோயால் எழுபத்தைந்து ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். 

இந்நிலையில் இந்த புற்றுநோயை கட்டுப்படுத்தும் வகையில், சீரம் நிறுவனம் பயோடெக்னாலஜி துறையுடன் இணைந்து, 'செர்வாவேக்' என்ற பெயரில் தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளது. 

இந்த தடுப்பூசியை ஒன்பது வயது முதல் பதினான்கு வயது உள்ள பெண் பிள்ளைகளுக்கு செலுத்துவதற்கு திட்டமிட்டு இருப்பதாகவும், அதன் படி, இந்த தடுப்பூசியை ரூபாய் 200 முதல் 400 ரூபாய் மதிப்பில் சீரம் நிறுவனம் வழங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசிகள், தனியார் மருத்துவமனைகளில் மூன்று ஆயிரத்து 500 ரூபாய் முதல் நன்கு ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

serum company provide indias first cervical cancer vaccine


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->