சபரிமலை : சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கு தனி வரிசை - இன்று முதல் அமல்.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில் கேரளா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறும். அந்தவகையில் இந்த வருடமும் சபரிமலையில் நடை திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். 

இந்நிலையில், மண்டல பூஜைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால் நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒரே நாட்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக வந்துள்ளனர். இதனால் நெரிசலில் சிக்கி பக்தர்கள் அவதிக்குள்ளானார்கள். 

இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கோவிலில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யவும் தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கோவிலில் தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு முடிவு செய்து, ஒரு நாளில் 90 ஆயிரம் பேர் மட்டுமே முன்பதிவு செய்யலாம் என்ற கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டு நடை,முறை படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்று அனைவரும் பல மணி நேரம் வரிசையில் நிற்பதால் சிரமப்படுவதாக புகார்கள் எழுந்தன. அந்த புகாரின் படி, அவர்களுக்கு தனி வரிசை அமைப்பது குறித்து கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ஆகவே, பம்பையில் தேவஸ்தான அமைச்சர் கெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தனி வரிசை ஏற்படுத்துவது என்று அறிவிக்கப்பட்டது. 

அந்த அறிவிப்பின் பேரில், இந்த தனி வரிசை இன்று முதல் அமலுக்கு வருகிறது. மேலும் தரிசனம் முடிந்து ஊர் திரும்பும் பக்தர்களுக்கு பம்பையில் இருந்து நிலக்கல் செல்வதற்காக போதிய பேருந்து வசதியை ஏற்படுத்தி கொடுப்பதற்கு மாவட்ட ஆட்சியருக்கு கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

seperate queue start today in sabarimalai for childrens and seniors


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->