பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தானின் 06 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி, துப்பாக்கிகள் மற்றும் ஹெராயின் பறிமுதல் செய்துள்ள பாதுகாப்பு படை..!
Security forces shoot down 06 Pakistani drones on Punjab border seize guns and heroin
பஞ்சாப்பில் எல்லை பகுதியில் பாகிஸ்தானின் 06 ட்ரோன்களை எல்லைப் பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்தியுள்ளது. அத்துடன், 03 கைத் துப்பாக்கிகள், 01 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், ட்ரோன்கள் பறந்ததை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டறிந்த நிலையில், அமிர்தசரஸில் பாகிஸ்தானின் ஐந்து டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. அங்கு அட்டாரி கிராமத்தில் ஒரு டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
மேலும், டர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள தால் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு நெல் வயலில் இருந்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கி பாகங்கள் மற்றும் ஆயுதங்களை மீட்டுள்ளனர்.
இந்நிலையில், பஞ்சாபில் பாகிஸ்தானின் 06 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதால், மிகப்பெரிய சதி செயல் முறியடிக்கப்பட்டுள்ளது என பஞ்சாப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
English Summary
Security forces shoot down 06 Pakistani drones on Punjab border seize guns and heroin