ஐம்பதாயிரம் ஆசிரியர்களுக்கு ஸ்கூட்டி - அசத்தல் திட்டத்தை அறிவித்த முதல்வர்.! - Seithipunal
Seithipunal


ஐம்பதாயிரம் ஆசிரியர்களுக்கு ஸ்கூட்டி - அசத்தல் திட்டத்தை அறிவித்த முதல்வர்.!

அசாம் மாநிலத்தில் உள்ள, தேஜ்பூர் பகுதியில் ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், "மாநிலத்தில் தொலைதூரப் பகுதிகளில் சில பள்ளிகள் உள்ளதனால், அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் தாமதமாக பள்ளிக்கு வர நேரிடுகிறது. அத்தகைய ஐம்பது ஆயிரம் ஆசியர்களுக்கு ஸ்கூட்டிகள் வழங்க உள்ளோம். 

இதன் மூலம் அவர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வர முடியும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மிதிவண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளோம். இதனால், உயர்நிலைப் பள்ளிக்கு மாணவர்கள் எளிதாகச் சென்று வர உதவும். 

எங்கள் அரசிற்கு முக்கியமானது என்னவென்றால், ஆசிரியர்கள் சரியான நேரத்தில் சென்றடைவதோடு மட்டுமல்லாமல் மாணவர்களும் ஒரு நிமிடம் கூட கற்றலை இழக்காமல் இருக்க வேண்டும்.

எந்தெந்த பகுதிகளில் எளிதாக பயணிக்க சாலைகள் மற்றும் பாலங்கள் தேவை என்பதை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும். மாநிலத்தின் பசுமையை அதிகரிக்க மாணவர்கள் தலா ஒரு மரக்கன்றுகளையாவது நட வேண்டும்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

scooty provide to fifty thousand teachers in assam


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->