ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு மூன்று நாட்கள் பயணமாக பிரதமர் மோடி இன்று வருகிறார். முதலாவதாக சென்னையில் 'கேலோ' இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கும் இவர், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக நாளை ஸ்ரீரங்கம்,ராமேஸ்வரம் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து தீர்த்தங்களையும் தனித்தனியாக சேகரிக்க உள்ளார்.

ஸ்ரீரங்கம், ராமேசுவரத்தை அடுத்து தனுஷ்கோடிக்கும் பிரதமர் மோடி செல்கிறார். இதன் காரணமாக ராமேஸ்வரத்தில் பலத்த பாதுகாப்பு மற்றும் கட்டுப்பட்டு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரதமர் வருகையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பன்னிரண்டு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு போலீசார் தங்குவதற்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று மாவட்டக் கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

schools holiday in rameshwaram


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->