மஹாராஷ்டிராவில் அதிர்ச்சி: மாணவியரின் ஆடைகளை அவிழ்த்து உள்ளாடைகள் சோதனை: பள்ளி முதல்வர் மற்றும் உதவியாளர் கைது..!
School principal and assistant strip searched students in Maharashtra
மஹாராஷ்டிராவில் பள்ளியில் மாணவியர் ஆடைகளை அவிழ்த்து உள்ளாடைகளை சோதனையிட்ட பள்ளி முதல்வர் மற்றும் உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஹாராஷ்டிரா தானே மாவட்டம் சஹாபூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றின் கழிப்பறையில், கடந்த08-ஆம் தேதி ஆங்காங்கே ரத்தத் துளிகள் தென்பட்டன. இதையறிந்த அந்த பள்ளி முதல்வர், ஐந்து முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவியரை பள்ளி கூட்டரங்கத்துக்கு அழைத்துள்ளார்.
பள்ளி கழிப்பறையில் தென்பட்ட ரத்த துளிகளை, 'வீடியோ' எடுத்து, பள்ளி நிர்வாகம் மாணவியருக்கு போட்டு காட்டியுள்ளது. அதனை தொடர்ந்து, மாதவிடாய் உள்ளவர்களை மாணவியரை சோதனையிட முடிவு செய்துள்ளது.
-za4ha.png)
பள்ளி முதல்வர் அறிவுறுத்தலின் படி மாணவியர்கள் ஒவ்வொருவராக கழிப்பறைக்கு அழைத்து சென்ற பெண் உதவியாளர், அங்கு அவர்களின் ஆடைகள் மற்றும் உள்ளாடைகளை அவிழ்த்து சோதனை இட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியர், வீட்டுக்கு சென்று தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் பள்ளி முன் குவிந்த மாணவியரின் பெற்றோர்கள், பள்ளி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை தொடர்ந்து, ஒரு மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து பள்ளி முதல்வர், நான்கு ஆசிரியைகள், உதவியாளர் உட்பட எட்டு பேர் மீது, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
English Summary
School principal and assistant strip searched students in Maharashtra