VVPAT வழக்கு | இன்று தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்.. எகிறும் எதிர்பார்ப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற பொது  தேர்தல்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவ்வாறு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களால் மோசடி நிகழ்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகின்றன. இதனால் வாக்குப்பதிவு இயந்திரத்துடன் வரும் விவிபேட் ஒப்புகை சீட்டுகளை முழுமையாக எண்ண வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கின் மீது கடந்த வாரம் விசாரணை நடைபெற்ற நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றது. அப்போது விவிபேட் சீட்டுகளை ஏன் எண்ணக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. அதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் ஒப்புகைச் சீட்டு என்ன காலம் அதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் ஒப்புகைச் சீட்டுகள் எண்ணுவதற்கு நீண்ட காலம் ஆகும் எனவும் அதற்கான இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் வாதத்தினை முன் வைத்திருந்தது. 

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் விவிபேட் ஒப்புகை கட்சிகளை எண்ணக்கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. 

இன்று வழங்கும் தீர்ப்பு தற்போது நடைபெற்ற வரும் நாடாளுமன்ற பொது தேர்தலுக்கும், பொருந்தும் வகையில் இருக்கலாம் என்பதால் இன்று வெளியாக உள்ள தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் எதிர்பார்த்த ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SC verdict in evm vvpat verification case today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->