அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் - சொன்ன வாக்கை காப்பாற்றுமா மத்திய அரசு?. - Seithipunal
Seithipunal


மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டு இருப்பதாக கடந்த எட்டாம் தேதி அன்று அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன் படி, மார்ச் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், மத்திய அரசு ஊழியர்கள் அந்த மாதத்திற்கான உயர்த்தப்பட்ட சம்பளத்தை மார்ச் 30ஆம் தேதியன்று பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், நிதியாண்டின் கடைசி நாள் என்பதால், மார்ச் 31ஆம் தேதியன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும், வங்கிகளை வேலை செய்யுமாறு இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. 

தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படுகிறது. 

தற்போது 4% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு இருப்பதால் 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால், ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத நிலுவைத் தொகையும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

salary with da to central govt employees


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->