மசூதி முன் காவி கொடி கட்டியதால் மோதல் மூண்டது! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் மசூதி ஒன்றின் முன்பு இந்து அமைப்பினர் காவி கொடி கட்டியதால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கர்நாடக மாநிலத்தை அடுத்த சிருங்கேரி பகுதியில் அமைந்துள்ள மசூதி ஒன்றின் முன்பு நேற்று இரவு இந்து அமைப்பினர் சிலர் காவி கொடி தோரணம், காவி கொடிகளை இயற்றியுள்ளனர். இதனை அப்பகுதியைச் செய்த இஸ்லாமியர்கள் சில தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

பாபாபுட்டங்கிரி யாத்திரையை முன்னிட்டு இந்து அமைப்பினர் அனைத்து சாலைகளிலும் காவி கொடுகளை கட்டி வந்துள்ளனர். ஆனால் மசூதி எதிரே கட்டப்பட்ட காவிக்கொடிக்கு மட்டும் அந்தப் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதலாக மாறி உள்ளது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு தகவல் அறிந்து வந்த போலீசார் மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். மேலும் இரு சமூகங்களுக்கு இடையே போலீசார் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதன் காரணமாக சிருங்கேரி பகுதியில் பதட்டமான சூழல் உண்டானது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Saffron flags were planted in front of mosque and riots erupted


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->