#Breaking : மீண்டும் ஒரு ரயில் விபத்து! 20 பெட்டிகள் தரம் புரண்டு வரலாறு காணாத விபத்து! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசத்தில் சமர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம்  வாரணாசியில் இருந்து புறப்பட்ட சமர்மதி பயணிகள் விரைவு ரயில்  இன்று அதிகாலை கான்பூர் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாரணாசி பல்வேறு மாநிலங்களுக்கும் உள் மாநிலத்தின் பல்வேறு நகரங்களுக்கும் தொடர்வண்டி சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் வாரணாசியில் இருந்து பயணிகளை ஏற்றுக்கொண்டு புறப்பட்டது.

குஜராத் மாநில அகமதாபாத் வரை செல்லும் சமர்மதி விரைவு தொடர் வண்டி உத்திர பிரதேசம் கான்பூர் அருகே பீம்சன் ரயில் நிலையத்துக்கு இடையில் தண்டவாளத்தில் இருந்த கற்பாறையில் இடித்ததாக கூறப்படுகிறது.

அதில் ரயிலில் உள்ள 20 பெட்டிகள் தடம் புரண்டதாக தகவல் வெளியாகிய நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்ததை அடுத்து உடனடியாக அங்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அங்கு விரைந்தது.

இந்த ரயில் விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ரயில் பாதையை சீர் செய்யும்  பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு  வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sabarmati Express train derails in Uttar Pradesh


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->