சபரிமலை பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி; ஆன்லைன் மூலம் தினமும் 10 ஆயிரம் பேர் கூடுதலாக அனுமதிக்க முடிவு..! - Seithipunal
Seithipunal


கேரளா சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் டிசம்பர் 27-ஆம் தேதி மண்டலபூஜை நடைபெறவுள்ளது. அன்று ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இதற்கான மண்டல வழிபாடுகள் கடந்த 17-ஆம் தேதி தொடங்கின.

இந்நிலையில், சபரிமலையில் தினமும் கூடுதலாக 10,000 பக்தர்களை அனுமதிக்க தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. இதன்காரணமாக பக்தர்கள் ஆர்வமுடன் தங்களுக்கு தேவைப்படும் தரிசன தேதிகளை முன்பதிவு செய்து வருகின்றனர். முன்னதாக, ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பக்தர்களும், ஸ்பாட் புக்கிங்கில் 20 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்பட்டனர்.  இதை விட கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில், ஸ்பாட் புக்கிங் ஒரு நாளைக்கு 05 ஆயிரமாக குறைக்கப்பட்டது. இதனால், கூட்ட நெரிசல் படிப்படியாகக் குறைந்துள்ளது. தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவுகள் ஜனவரி 10-ஆம் தேதி வரை தற்போது முடிந்துள்ளன.

இதனால் சபரிமலைக்கான பயணத்தை முன்னதாக திட்டமிடாத பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இவர்கள் எருமேலி, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் பல மணி நேரம் காத்திருந்து, அங்கு ஸ்பாட் புக்கிங் செய்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், சபரிமலையில் தேவசம் போர்டு மற்றும் போலீஸார் சார்பில் பல்வேறு விதங்களிலும் கூட்ட மேலாண்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் கூட்ட நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால் இனிவரும் நாட்களில் ஆன்லைன் மூலம் தினமும் 10 ஆயிரம் பக்தர்களை கூடுதலாக அனுமதிக்க தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.

இதனையடுத்து, தேவசம் போர்டு இணையதளத்தில் இம்மாதம் 07-ஆம் தேதியிலிருந்து 25-ஆம் தேி வரையும், டிசம்பர் 30-ஆம் தேதி முதல் ஜனவரி 10-ஆம் தேதி வரையும் புக்கிங் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் சபரிமலை செல்லும் பக்தர்கள் பலரும் ஆர்வமுடன் புக்கிங் செய்து வந்த நிலையில், இம்மாத கடைசி தேதிகள் வரை புக்கிங் நிறைவடைந்து விட்டதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sabarimala Devotees to be allowed to enter online by 10 000 people daily


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->