அதிரடி சோதனை.! காங்கிரஸ் வேட்பாளரின் நண்பர் வீட்டில் சிக்கிய ரூ.2 கோடி பணம்..! - Seithipunal
Seithipunal


கர்நாடகா சட்டசபை தேர்தல் நாளை மறுநாள்(மே மாதம் 10ஆம் தேதி) நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுப்பதற்காக மாநிலம் முழுவதும் தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், மண்டியா மாவட்டம் மத்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கே.ம்.உதய் என்பவரது நண்பர்களான சுரேஷ் பாபு மற்றும் ரமேஷ் ஆகியோர் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து, சுரேஷ்பாபு வீட்டில் சோதனை நடத்தியதில் ரூபாய் 2 கோடி பணம் சிக்கியது. மேலும் ரமேஷ் வீட்டில் மூன்று லட்சத்து 50 ஆயிரம் பணம் சிக்கியது. இதைத்தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், சுரேஷ் பாபுவை கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ரமேஷிடமும் இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rs 2 crore money seized in the house of Congress candidate friend in Karnataka


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->