பட்டப்பகலில் கொள்ளை! டெலிவரி ஊழியர்கள் போல் வேடமிட்டு நகைகடையில் கொள்ளை! அதிர்ச்சி வீடியோ!
Robbery in broad daylight Robbery jewelry store by people disguised as delivery staff Shocking video
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பட்டப்பகலில் நகைக்கடையில் நடந்த கொள்ளை சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் காசியாபாத்திலுள்ள ஒரு நகைக்கடையில் நேற்று அதாவது வியாழக்கிழமை மதியம் 3:30 மணியளவில், உணவு டெலிவரி ஊழியர்கள் போல மாறுவேடத்தில் 2 கொள்ளையர்கள் புகுந்தனர்.
மேலும், அந்த வீடியோவில் தலைக்கு ஹெல்மெட் அணிந்து, ஸ்விக்கி மற்றும் பிளிங்கிட் டெலிவரி ஊழியகர்கள் போல உடையணிந்த 2 பேரும் நகைகளை அள்ளி எடுத்து தங்கள் பைகளில் நிரப்பினர்.
அதன் பின்னர் அவர்கள் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.இதில் கடையிலிருந்து சுமார் 20 கிலோ வெள்ளி மற்றும் 125 கிராம் தங்கம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Robbery in broad daylight Robbery jewelry store by people disguised as delivery staff Shocking video