பிரபல ரேடியோ ஜாக்கி., தொலைக்காட்சி தொகுப்பாளர் தற்கொலை.! அதிர்ச்சியில் திரை உலகம்.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தின் பிரபல ரேடியோ ஜாக்கி அனன்யா குமாரி அலெக்ஸ் மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டிருப்பது, அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநில சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட திருநங்கையும், பிரபல டிவி, ரேடியோ ஜாக்கியுமான அனன்யா குமாரி அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்லம் மாவட்டம், பெருமன் பகுதியை சேர்ந்தவர் அனன்யா குமாரி அலெக்ஸ். திருநங்கையான இவருக்கு 28 வயதாகிறது. கேரள மாநிலத்தின் முதல் திருநங்கை ரேடியோ ஜாக்கி (ஆர்ஜே) என்ற பெயரை பெற்றவர் இவர்.

மேக்கப் கலைஞர், டிவி செய்தி வாசிப்பாளர், பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி பிரபலமடைந்தவர். கேரள மாநிலத்தில் முக்கிய பிரபலமாக இருந்த இவர், திருநங்கைகளின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

மேலும், அண்மையில் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் மனுத்தாக்கல் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். கேரளா மாநிலத்தில் தேர்தல் களத்தில் போட்டியிட்ட முதல் திருநங்கை வேட்பாளர் என்ற பெயரையும் அனன்யா பெற்றுள்ளார்.

இருப்பினும் அவர் தேர்தலுக்கு முன்பாக போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்நிலையில், அனன்யா குமாரி அவர் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கருதுகின்றனர். ஆயினும் பிரபலமான ஒருவர் மரணம் தற்கொலை கொண்டிருப்பதில் மர்மம் இருப்பதாக பலரும் கருதுகின்றனர். 

இதற்கிடையே அனன்யா மரணம் குறித்து விசாரணை நடத்த சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RJ ananya suicide


கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்Advertisement

கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்
Seithipunal