வங்க கடலில் உருவானது டிட்வா புயல்; நாளை 04 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்..!
Red alert for 04 districts tomorrow due to Cyclone Titva forming in the Bay of Bengal
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'டிட்வா' புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 04 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் (சிவப்பு எச்சரிக்கை ) விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 730 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'டிட்வா' புயலாக உருவானது. அது மேலும் தீவிரமடைந்து, அடுத்த 48 மணி நேரத்தில், ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகரும்.
இன்று (நவம்பர் 27) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம்
நாளை (நவம்ப 28) அதி கனமழை (ரெட் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம்
நாளை (நவம்பர் 28) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
ராமநாதபுரம்,சிவகங்கை,திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை
நாளை (நவம்பர் 28) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, பெரம்பலூர்,கடலூர்
நாளை மறுநாள் (நவம்பர் 29) அதி கனமழை (ரெட் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு.
நாளை மறுநாள் (நவம்பர் 29) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர்,
நாளை மறுநாள் (நவம்பர் 29) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
புதுக்கோட்டை, திருச்சி, கரூர்,நாமக்கல்,சேலம்,தர்மபுரி,கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்
நவம்பர் 30 மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர்.
நவம்பர் 30 ஆம் தேதி கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம். என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Red alert for 04 districts tomorrow due to Cyclone Titva forming in the Bay of Bengal