#Breaking: வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதம் குறைப்பு.. ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு..!!
RBI Chief Latest press meet repo bank percentage reduced
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த் தாஸ் இன்று (மே 22, 2020) செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், உலகளவிலான பொருளாதாரமானது மந்தநிலையை நோக்கி பயணம் செய்து கொண்டு இருக்கிறது. உலக முழுவதுமே பொருளாதார நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கியுள்ளது. கடனிற்கான ரெப்போ வட்ட விகிதம் 40 அடிப்படை புள்ளிகள் குறைக்கபட்டதாக அறிவித்தார்.
வங்கிகளுக்கான குறிகிய கால கடன் வட்டி விகிதம் ரெப்போ 0.4 விழுக்காடு குறைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதமான ரெப்போ 4.4 விழுக்காட்டில் இருந்து 4 விழுக்காடாக குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 60 விழுக்காடு உற்பத்தி துறை கொரோனா சிவப்பு அல்லது ஆரஞ்சு மண்டலத்தில் அமைந்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 0.4 விழுக்காடு குறைக்கப்பட்டதன் காரணமாக வீட்டுக்கடன் வட்டிகள் குறைய வாய்ப்புகள் இருக்கிறது. உணவு தானிய உற்பத்தி 3.7 விழுக்காடு அளவிற்கு அதிகரித்து இருக்கிறது. நாட்டின் உற்பத்தி 17 விழுக்காடு அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது. ரிவர்ஸ் ரெப்போ விகிதமான 3.35 விழுக்காடாக குறைக்கப்படுகிறது.
காய்கறிகளின் விலையில் நிலையற்ற தன்மையானது தொடர்ந்து நீடித்து வருவது அதிகளவு கவலையை ஏற்படுத்திருக்கிறது. பல்வேறு துறைக்கான உள்நாட்டு தேவை கவலையை அளிக்கும் அளவிற்கு குறைந்து இருக்கிறது. அந்நிய செலவாணி கையிருப்பு 487 பில்லியன் டாலர் அளவிற்கு இருக்கிறது.
நடப்பு வருடத்தின் நிதியாண்டில் இரண்டாவது பாதியில் பணவீக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயத்துறை 44 விழுக்காடு வளர்ச்சியை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்நியச்செலாவணி வளர்ச்சி விகிதம் குறைந்து, பணவீக்கத்தை மறுசீரமைப்பு செய்யும் வகையில் உள்ளது.
இந்திய பொருளாதாரத்திற்கு முக்கிய உதவி செய்யும் மாநிலத்தில் அதிகளவு கொரோனா பாதிப்பு இருக்கிறது. நகர்ப்புற மற்றும் கிராமப்புற தேவைகளில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும். இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பில் இருந்து இந்தியா கட்டாயம் மீண்டு எழும்.
பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையானது வரும் மாதத்தில் உயர வாய்ப்புகள் இருக்கிறது. ஜிடிபி வளர்ச்சி விகிதம் வரும் ஆண்டில் எதிர்மறையாக இருக்கும். 11 வருடத்தில் இல்லாத அளவிற்கு பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. உலக பொருளாதாரமே 13 விழுக்காட்டில் இருந்து 33 விழுக்காடு குறைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
வங்கி கடனிற்கான இ.எம்.ஐ சலுகையானது மேலும் மூன்று மாதங்கள் நீட்டிப்பு செய்து அறிவிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் கூறினார். ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதால், வீடு மற்றும் வாகனம் உள்ளிட்ட வங்கி கடனிற்கான இ.எம்.ஐ செலுத்த 3 மாத காலம் அவகாசம் அளித்து உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
RBI Chief Latest press meet repo bank percentage reduced