இனி 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது.. இதுவே கடைசி நாள்.. ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


கடந்த 2016ம் ஆண்டு இந்தியாவில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் அனைவரும் திண்டாடினார்கள். அதன் பின்னர் 1000 ரூபாய் நோட்டிற்கு பதிலாக பிங்க் நிறத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்திற்கு வந்தது.

இந்த புதிய 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்த சில நாட்களிலேயே அதிகளவிற்கு அச்சடிக்கப்பட்டதால் கடந்த 2019 ஆம் ஆண்டு அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டது. மேலும் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளும் குறைய தொடங்கின.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் ரூ.2000 நோட்டுகளின் புழக்கம் குறைந்து வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்தக் கேள்விக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருந்தது.

அதில் "தற்போது நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகள் போதுமானதாக உள்ளது. அதனால், புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் திட்டம் எதுவும் தற்போது இல்லை. கடந்த 2019 ஆம் ஆண்டிலேயே 2000 நோட்டுகள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் வரும் செப்டம்பர் 30ம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகளும் 2000 ரூபாய் நோட்டுக்களை வழங்குவதை நிறுத்திக் கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. வரும் மே 23ஆம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து கணக்கில் வர வைத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு நபர் ஒரு நாளைக்கு 20,000 ரூபாய் வரை மட்டுமே வங்கியில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் செல்லும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RBI announced No more 2000 rupees notes from sep30


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->