இந்தியா, சீனா பேச்சுவார்த்தை சரியான திசையில் செல்வதாக ரன்தீர் ஜெயிஸ்வால் தெரிவிப்பு..! - Seithipunal
Seithipunal


இந்தியா மற்றும் சீனா இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தையை இந்தியா, அமெரிக்கா முன்னெடுத்து செல்லும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இந்நிலையில், குறித்த பேச்சுவார்த்தை சரியான திசையில் சென்று கொண்டுள்ளது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இது குறித்து டில்லியில் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: இரு தரப்பு வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்து செல்லும் நடவடிக்கையை இந்தியாவும் அமெரிக்காவும் தொடங்கியுள்ளன என்றும்,  வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்புகளை உருவாக்க இரு நாட்டு அரசுகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த இந்த ஒப்பந்தம் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதுடன், சந்தை அணுகலை மேம்படுத்தி வரி மற்றும் கட்டண தடைகளை அகற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது. என்றும், பரஸ்பரம் நன்மை பயக்கும் இரு தரப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு இந்திய அரசு தொடர்ந்து பல்வேறு மட்டங்களுடன் அமெரிக்கா உடன் தொடர்பில் உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், அமெரிக்காவில் ஹமாசுடன் தொடர்பில் உள்ளதாக கைது செய்யப்பட்டுள்ள பாதர் கான் சூரி குறித்த விவகாரம் மீடியாவில் மூலம் தெரிந்து கொண்டதாக தெரிவித்துள்ள அவர்,  அமெரிக்க அரசோ அல்லது அவரோ எங்களையோ, இந்திய தூதரகத்தையோ தொடர்பு கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் தொடர்ந்து அளிக்கும் ஆதரவு மற்றும் நிதியுதவி ஆகியவையே பிரச்னையாக உள்ளது என்பதை அனைவரும் அறிவார்கள் என்றும்,  இந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பு ஏற்பட இது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், ரஷ்யாவின் கசன் நகரில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்து கொண்டனர். அதன் பிறகு, வெளியுறவுத் துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்தில் ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தை நடக்கிறதாக ஜெயிஸ்வால் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஜனவரி மாதம் வெளியுறவுத்துறை செயலர் சீனா சென்று அந்நாட்டு செயலரை சந்தித்து பேசினார். இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை சரியான திசையில் சென்று கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாத அமைப்புகளுக்கு அளித்த ஆதரவு காரணமாகவே இந்தியா மற்றும் கனடா இடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பரஸ்பர நம்பிக்கை அடிப்படையில் இரு தரப்பு உறவை மேம்படுத்த முடியும் என நம்புவதாகவும் அவர் ரன்தீர் ஜெயிஸ்வால் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Randhir Jaiswal stated that the India and China talks are going in the right direction


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->