அடுத்தாண்டு ஜனவரியில் ராமர் கோவில் திறக்கப்படும் - முதல்வர் யோகி ஆதித்யநாத் தகவல்.! - Seithipunal
Seithipunal


அடுத்தாண்டு ஜனவரியில் ராமர் கோவில் திறக்கப்படும் - முதல்வர் யோகி ஆதித்யநாத் தகவல்.!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் அடுத்தாண்டு ஜனவரியில் திறக்கப்படவுள்ளது. இந்தத் திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு அயோத்தி கோயில் அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது. 

இந்த நிலையில் பாஜக அரசின் ஆட்சியின் 9-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அயோத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- 

"பாஜக அரசின் 9-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அயோத்தியில் வரும் நாட்களில் நடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பாஜக எம்.பி.க்கள் கலந்து கொள்ள வேண்டும். அயோத்தி நகரம் ராம ராஜ்யத்தை நோக்கி செல்வது மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டையும் உற்சாகப்படுத்தும் தன்மை வாய்ந்தது. 

நான் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அயோத்தி சென்று, ராமர் கோயிலில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டு வருகிறேன். ராமர் கோவிலில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்களால், அயோத்தி மக்களுக்கு சில சிரமங்கள் இருக்கலாம். உயர்ந்த லட்சியத்துக்காக, அதை பொறுத்துக் கொள்ள வேண்டும். 

அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்களில், அயோத்தி சாலைகள், டெல்லி ராஜபாதையுடன் ஒப்பிடும் வகையில் இருக்கும். அந்தப் பாதைக்கு நாம் "ராமர் பாதை" என்று பெயரிட்டுள்ளோம். அதேபோல், ராம் ஜென்மபூமியை நோக்கிச் செல்லும் சாலைக்கு "பக்தி சாலை" என்று பெயரிடப்படும். 

கடந்த ஆட்சிக் காலங்களில் அரசுப் பணம் கொள்ளையடிக்கப்பட்டதால் நிதிப்பற்றாக்குறை நிலவியது. மாநிலத்தில் அடிப்படை வசதிகளை வழங்கவும், அனைத்து தரப்பு மக்களுக்கு உதவவும் எனது அரசு பணியாற்றிக் கொண்டிருக்கிறது" என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ramar temple open next year january cm yogi adityanat announce


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->