போலி மந்திரவாதிகள் கொடுத்த உணவால் 3 பேர் பலி; ₹50 லட்சம் கொள்ளை!
rajasthan fake manthiravathi 3 people killed
ராஜஸ்தான் பிகானீர் மாவட்டம் கஜுவாலா பகுதியில், கறுப்பு மந்திரம் செய்வதாகக் கூறி வீட்டிற்குள் புகுந்த மோசடி மந்திரவாதிகள் மூன்று உயிர்களை வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்துல் கப்பார் என்ற ஒருவர் வீட்டில் பணம் இரட்டிப்பாக்கும் சடங்கு நடக்க, ஷைத்தான் சிங், விக்ரம் சிங் மற்றும் ரஜேந்திர சிங் ஆகியோருடன் சேர்ந்து சடங்கில் பங்கேற்றார். அவர்களை அழைத்துக் கொண்டு வந்த மோசடி மந்திரவாதிகள், சடங்கு நடக்கும்போது உணவுப்பொருள்கள் வழங்கினர். அதை உணவாக எடுத்துக் கொண்ட அனைவரும் மயங்கி விழுந்தனர்.
இதையடுத்து, வீட்டில் இருந்த பணம், நகை உள்ளிட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்களை அவர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திலிருந்த நபர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர்களில் மூவர் உயிரிழந்தனர். ஒருவர் இன்னும் சிகிச்சையில் உள்ளார்.
விஷமுள்ள உணவுதான் காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்தில் சடங்கு சம்பந்தமான அடையாளங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
rajasthan fake manthiravathi 3 people killed