காவல் நிலையத்தில் இளம்பெண் தீக்குளித்த விவகாரம் - முதல்வர் ரங்கசாமி அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி : பிள்ளைச்சாவடி மீனவர் பகுதியை சேர்ந்த தம்பதி சந்திரன் - கலைச்செல்வி. இவர்கள் கடனாக கொடுத்த ரூ 5 லட்சத்தை ஏழுமலை தராமல் ஏமாற்றிவிட்டதாக காலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

ஆனால், ஏழுமலை மீது நடவடிக்கை எடுக்காத போலீசார், சந்திரன் மற்றும் அவரின் மனைவியை வெளியே அனுப்பியுள்ளனர்.

காவல் நிலையம் வந்தும் தங்களுக்கு பணம் கிடைக்கவில்லையே என்ற விரக்தியில் சந்திரனின் மனைவி கலைச்செல்வி பெட்ரோலை எடுத்து வந்து தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கலைச்செல்வி இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனால் ஆத்திரமடைந்த உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள், நீதி மற்றும் நிவாரணம் தர கோரி, புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தீக்குளித்த பெண் உயிரிழந்த விவகாரத்தில் முறையாக விசாரணை செய்ய முதல்வர் ரங்கசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், உயிரிழந்த கலைச்செல்வி குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry Young lady Suicide case CM Rangasamy Announce


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->