நீட் தேர்வு கண்டிப்பாக உண்டு.. கல்வி அமைச்சர் பேட்டி.!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் கல்வி அமைச்சராக பாஜகவின் நமசிவாயம் பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து, அவர் கல்வித் துறை தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது, அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உடன் கலந்து ஆலோசித்து, அனைத்து கல்லூரிகளுக்கும் ஆன்லைனில் தான் தேர்வு நடத்த வேண்டும் என கடிதம் அனுப்பியுள்ளேன். 

தனியார் பள்ளிகள் முழு கட்டணம் வசூலிப்பதாக அரசிடம் புகார் வந்துள்ளது. இது தொடர்பாக கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதனிடையே, நீட் தேர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர், நீட் தேர்வு என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு. நாம் மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒரு அரசு. எனவே மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தான் நம்முடைய அரசை நடத்த முடியும். இதனால் நீட் தேர்வு கண்டிப்பாக உண்டு என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puducherry minister namachivayam says about neet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->