மம்தா பானர்ஜியை சமரசம் செய்வதற்கு பிரதமர் மோடி வருகிறார் - ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேட்டி.! - Seithipunal
Seithipunal


இன்று நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்காள மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் ரூ.7800 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தும், முடிக்கப்பட்ட திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பும் செய்கிறார். 

இதையடுத்து கொல்கத்தாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று ஹவுரா-நியூ ஜல்பாய்குரியை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து, ஜோகா-தரதாலா இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்தையும் தொடங்கி வைக்கிறார். இந்நிலையில், பிரதமரின் மேற்கு வங்க பயணத்தை காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

இது தொடர்பாக மேற்கு வங்க காங்கிரஸ் தலைவரும், அந்தக் கட்சியின் மூத்த எம்.பி.யுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது,

"ஒரு ரெயில் சேவையை நாட்டின் பிரதமர் தொடங்கி வைக்கிறார் என்பதை இதுவரை நாம் கேள்விப்பட்டதே இல்லை. நான் ரெயில்வேத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளேன். 

ஆனால் எங்கள் ஆட்சியின் போது பிரதமர் மன்மோகன் சிங் எந்த ரெயில் இயக்கத்தையும் தொடங்கி வைத்ததில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கு வங்காளத்திற்கு வந்தார்.

தற்போது மம்தா பானர்ஜியுடன் சமரசம் செய்வதற்கு பிரதமர் மோடி வருகிறார். இதனால் மம்தா மற்றும் அவரது கட்சியினருக்கு எதிரான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணையின் வேகம் குறையும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prime minister narendira modi going to west bengal


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->