இந்தோனேசியாவிற்கு இந்தியா துணை நிற்கும் - பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


நேற்று இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில், பலியானோர் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 300க்கும் மேற்பட்டோர் பலத்தக் காயமடைந்தனர். 

இந்த தகவலை ஜாவா தீவு ஆளுநர் ரித்வான் காமில் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த நிலநடுக்கத்தில் சுமார் 2200 வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், 5300 பேர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டது மட்டுமல்லாமல், 13,000 பேர் நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மோசமான சூழ்நிலையில் இந்தோனேசியாவுக்கு இந்தியா துணை நிற்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த நிலநடுக்கம் குறித்து பிரதமர் மோடி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த செய்தில்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,

"இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏராளமானோர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். இதில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன். இந்த மோசமான சூழ்நிலையில் இந்தோனேசியாவுக்கு இந்தியா துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prime minister modi says india suppot indonesiya


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->