சர்வதேச AI உச்சி மாநாடு; டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..! - Seithipunal
Seithipunal


'அனைவரின் நலன், அனைவரின் மகிழ்ச்சி' என்ற கருப்பொருளில், ஐந்து நாள் சர்வதேச செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாடு, இன்று டெல்லி பாரத் மண்டபத்தில் தொடங்கியது. சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள், ஸ்டார்அப் நிறுவனங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன.

இந்த  விழாவை பிரதமர் மோடி இன்று மாலை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாநாட்டில் உள்ள கண்காட்சியையும் ஆவர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சி மற்றும் உச்சி மாநாட்டிற்காக 70 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் 10 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குறித்த கண்காட்சியில் ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்பட 10க்கும் மேற்பட்ட வெளிநாடுகளின் அரங்குகளும் இடம்பெற்றுள்ளன. இதில் ஏஐ குறித்த நேரடி செயல் விளக்கங்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, இந்த கண்காட்சியில் 02 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுகிறது. குறித்த மாநாட்டில் வரும் 19-ஆம் தேதி பிரதமர் மோடி உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அத்துடன், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் உள்பட பல முக்கியஸ்தர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.   
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prime Minister Modi inaugurated the International AI Summit in Delhi


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->