30 நாட்கள் சிறையில் இருக்கும் முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் புதிய மசோதாக்கு பிரசாந்த் கிஷோர் ஆதரவு..! - Seithipunal
Seithipunal


கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால், பிரதமர், முதல் அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் புதிய சட்ட மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  லோக்சபாவில் தாக்கல் செய்துள்ளார். இந்த மசோதாவை'' 130-வது அரசியலமைப்பு திருத்தம் சீர்திருத்தம் அல்ல - இது ஒரு கருப்பு நாள், இது ஒரு கருப்பு மசோதா'' என தமிழக முதலமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதற்கு ஆதரவாகும் சிலர் கருது தெரிவித்துள்ளனர். அதன்படி, சிறை செல்லும் முதல்வர்களை பதவி நீக்க புதிய சட்டம் கொண்டு வவரப்பட்டமைக்கு, ஜன் சுராஜ் கட்சித் தலைவரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரசாந்த் கிஷோர் கூறியதாவது: இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது நல்லது. ஏனெனில், அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போது, அதை உருவாக்கியவர்கள் நாட்டில் அதிகாரத்தில் இருப்பவர்கள் இவ்வளவு ஊழல்வாதிகளாகவும், குற்றவாளிகளாகவும் மாறி சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஒரு தலைவர் மீது குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டால், அவர்களால் சிறையில் இருந்து அரசாங்கத்தை தொடர்ந்து நடத்த முடியாது என்பதால், இந்த மசோதா நல்லது என்று தான் நம்புவதாக பிரசாந்த் கிஷோர்குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,  130-வது அரசியலமைப்பு திருத்தம் சீர்திருத்தம் குறித்து காங்கிரஸ் எம்பி சசிதரூர் நிருபர்களுக்கு பதிலளித்துள்ளதாவது:  என்னைப் பொறுத்தவரை, இந்த மசோதா குறித்து உங்களுக்கு ஒரு கருத்தைச் சொல்லும் அளவுக்கு அந்த மசோதா குறித்து தான் இன்னும் படிக்கவில்லை. மேலோட்டமாகப் பார்த்தால் தவறு செய்தவர்கள் தங்கள் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கருத்தில் எந்தத் தவறும் இல்லை என்றும் கூறினேன். மசோதாவைப் படிக்காமல் நான் அதை ஆதரிக்கவோ எதிர்க்கவோ இல்லை என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prashant Kishor supports new bill to remove CMs who spend 30 days in jail


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->