ராகுல், அகிலேஷ் யாதவ், எலான் மஸ்க் உள்ளிட்டோர் முகங்களுடன் லக்னோவில் 'சனாதன இந்​தி​யாவின் எதிரி ராவணன்' போஸ்டர்கள்..! - Seithipunal
Seithipunal


உத்​தரபிரதேச மாநிலம் லக்​னோவின் தசரா பண்​டிகையை முன்​னிட்டு,  பல சந்​திப்​பு​களில் 'சனாதன இந்​தி​யாவின் எதிரி ராவணன்' என்ற தலைப்​பிலான போஸ்​டர்​கள் வைக்​கப்​பட்​டுள்​ளன. அதில் இந்​திய,சர்​வ​தேசப் அரசியல் பிரபலங்​கள் இடம்​பெற்​றுள்​ளமை கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்​தப் போஸ்​டர்​களை 'சனாதன் ரக் ஷா சங்​கதன்' என்ற அமைப்பு ஒட்​டிய​தாகக் கூறப்​படு​கிறது. இந்த போஸ்டரில் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி, அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் உள்​ளிட்​டோர் பத்து தலை ராவணனின் முகங்​களு​டன் சித்​தரிக்​கப்​பட்​டுள்​ளனர்.

அவர்களுடன், சமாஜ்வாதி கட்​சித் தலை​வர் அகிலேஷ் யாதவ், வங்​கதேசத்​தின் முகமது யூனுஸ், வழக்​கறிஞர் பிரசாந்த் பூஷண், உத்​தர பிரதேசத்​தைச் சேர்ந்த அரசி​யல்​வாதி​களான அதீக் அகமது, முக்​தார் அன்​சாரி (இவர்​கள் இரு​வர் மீதும் பல குற்ற வழக்​கு​கள் நிலுவை​யில் இருந்​தன) மற்​றும் பலர் அந்​தப் போஸ்டரில் இடம்​பெற்​றுள்ளனர்.

அரசி​யல் தலை​வர்​கள், வெளி​நாட்​டுப் பிரபலங்​கள் மற்​றும் குற்ற வழக்​கு​களு​டன் தொடர்​புடைய​வர்​களை, இந்​தி​யாவின் நலனுக்கு எதிரானவர்​கள் என்று காட்​டும் வகையில் இந்​தப் போஸ்​டர்​கள் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Posters of Ravana featuring the faces of Rahul and Elon Musk others appear in Lucknow


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->