பாண்டிச்சேரி: 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் வழிந்து ஓடிக் கொண்டிருக்கிறது. புதுச்சேரி பகுதியில் உள்ள ஓடைகளிலும் மழை நீர் வெள்ளம் போல் ஓடிக்கொண்டிருக்கிறது.

வளிமண்டல மேற்கு காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என ஏற்கனவே சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியிருந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் உள்ள பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் ஏற்கனவே 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை நாளை பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், பத்தாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் நாளை பள்ளி விடுமுறை விடப்படுவதாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pondicherry School Holiday Announced due to Rain and Flood 22 Feb 2021


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->