புதுச்சேரியில் 27 ஆம் தேதி அமைச்சரவை பொறுப்பேற்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி சந்தித்த நிலையில், என்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி அடைந்தது. இதனையடுத்து, புதுச்சேரி சட்டப்பேரவைக்கு தேவையான மெஜாரிட்டி என்.ஆர் காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைத்ததை தொடர்ந்து, புதுச்சேரியின் முதல் அமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ரங்கசாமி பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதன்பிறகு, என்.ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணியிடையே அமைச்சரவை பகிர்ந்துகொள்ளுதல் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், பாஜகவிற்கு சபாநாயகர், 2 அமைச்சர் பதவி வழங்க  முடிவு செய்யப்பட்டது. என்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு துணை சபாநாயகர், 3 அமைச்சர் பதவிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அமைச்சரவை விவகாரத்தில் பாஜக மற்றும் என்ஆர் காங்கிரஸ் இடையே சமாதானம் ஏற்பட்டதால்,  என்ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசின் அமைச்சர் பட்டியல் துணை நிலை ஆளுநரிடம் முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

இந்நிலையில், புதுச்சேரியில் வரும் 27 ஆம் தேதி அமைச்சரவை அதிகாரபூர்வமாக பதவியேற்கும் என புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார். இதனால் புதுச்சேரியில் நீண்ட இழுபறிக்கு பின்னர், அமைச்சரவை பொறுப்பேற்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pondicherry NR Congress BJP Ministers Posting Graduate Date 27 June 2021


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->