ஆன்லைன் சூதாட்டம்: பணத்தை இழந்த போலீஸ்காரர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த போலீஸ்காரர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் நடுமஸ்கேரி பகுதியை சேர்ந்தவர் போலீஸ் ராமேகவுடா(32). குந்தாப்புரா காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இவர் கடந்த வாரமாக வேலைக்கு செல்லாமல் இருந்ததால் காவல் நிலையத்தில் இருந்து செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உள்ளனர்.

ஆனால் அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தால், போலீசார் அவரது வீட்டிற்குச் சென்று விசாரித்தபோது அவர் வீட்டில் இல்லாததும், ஒன்னாவர் கடற்கரை அருகே உள்ள மரத்தில் ராமேகவுடா தூக்கில் பிணமாக தூங்கியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ராமேகவுடாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ததில், ராமேகவுடா ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததும், அதில் அதிகளவு பணத்தை இழந்ததும் தெரியவந்தது. மேலும் இதற்காக கடன் வாங்கியும், சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்ததால் மனவேதனைக்கு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. அதில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து விட்டேன். மேலும் எனது தங்கைக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லை, அவளுக்கு வேலையும் வாங்கி தர முடியவில்லை என்பதால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

policeman who lost money in online gambling committed suicide after writing a letter in Karnataka


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->