திருமணமான பெண்ணுடன் கள்ளகாதல்.. எஸ்.ஐக்கு கிடைத்த தர்ம அடி..! - Seithipunal
Seithipunal


கள்ளகாதலியுடன்  இருந்த எஸ் ஐ யை உறவினர்கள் பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தெலுங்கானா மாநிலம் வன்பர்த்தி புறநகர் காவல்நிலையத்தில் எஸ்.ஐ யாக பணியாற்றியவர் ஷேக் சபீக். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளைடைவில் கள்ளகாதலாக மாறவே இருவரும் அந்த பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாத போது உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதனை அறிந்த அந்த பெண்ணின் கணவர் இருவரையும் கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தார்.

அதன் படி, மனைவியிடம் தான் வேலை விஷயமாக ஊருக்கு செல்வதாக கூறியுள்ளார். அதனை நம்பிய அந்த பெண் ஷேக் சபீக்கை வீட்டிற்கு வர சொல்லியுள்ளார். இது அனைத்தையும் அந்த பெண்ணின் கணவன் அருகில் இருந்த வீட்டில் இருந்து கவனித்து வந்துள்ளார்.

ஷேக் சபீக் அந்த பெண்ணுடன் தனியே இருந்த போது அந்த பெண்ணின் கணவர் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வந்து கதவை தட்டியுள்ளார். அவர்கள் அனைவரும் ஷேக் சபீக்கையும் அந்த பெண்ணையும் சரமாரியாக தாக்கினர்.

தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் எஸ் ஐயை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police si suspended for illegal affair in telangana


கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,
Seithipunal