பெண்களை வணங்கும் பிரதமர் மோடி!!! ட்விட்டரில் மகளிர் தின வாழ்த்து...!
PM Modi worships women and wishes Womens Day on Twitter
பிரதமர் நரேந்திர மோடி,உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார் . அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது, " உலக மகளிர் தினத்தில் நமது பெண் சக்திக்குத் தலை வணங்குவோம். நமது அரசு எப்போதும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகப் பாடுபட்டுள்ளது. எனது சமூக வலைதளக் கணக்குகளை பல்வேறு துறைகளில் முத்திரைப் பதிக்கும் பெண்கள் கையால்வார்கள்"என்று தெரிவித்துள்ளார்.

செஸ் வீராங்கனை வைஷாலி:
மேலும் இந்த மகளிர் தினத்தையொட்டி பிரதமர் மோடியின் எக்ஸ் தல கணக்கை, தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி கையாள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி தற்போது வலைதளங்களில் பரவி வருகிறது. அதுமட்டுமின்றி செஸ் வீராங்கனை வைஷாலி பற்றியும் சமூக வலைதளங்களில் மக்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
English Summary
PM Modi worships women and wishes Womens Day on Twitter