''நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் பிரார்த்திக்கிறேன்'' - தேவ கௌடாவுக்கு பிரதமர் வாழ்த்து!
PM Modi wishes Devegowda
மதச்சார்பற்ற ஜனதா ஜனதாதளக் கட்சியின் தலைவர் தேவ கௌடாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி, ஸ்ரீ தேவகவுடா ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் தேசத்திற்கான சேவைக்காக அரசியல் ஸ்பெக்ட்ரம் முழுவதும் மதிக்கப்படுகிறார்.
விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டின் மீதான அவரது ஆர்வம் குறிப்பிடத்தக்கது. அவரது நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.