'ஜிஎஸ்டி வரி குறைப்பால் நடுத்தர மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி': பிரதமர் மோடி பேச்சு..!
PM Modi says GST tax cut will bring double happiness to middle class
புதிய ஜி.எஸ்.டி வரி குறைப்பு அறிவிப்புகள் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 05 மணியளவில் நாட்டு மக்களிடம் காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது, அவர் கூறியதாவது;
"நவராத்திரியின் முதல் நாளில் (செப்டம்பர் 22) ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலாகிறது. இதனால், ஏழைகள், நடுத்தர மக்கள், பெண்கள், வணிகர்கள் என அனைவரும் பயன் பெறுவர் என்று கூறினார்.மேலும், மக்கள் விரும்பிய பொருட்களை குறைந்த விலையில் பெறலாம், சேமிப்பு அதிகரிக்கும் என்று குறிப்பிட்டார்.

அத்துடன், இந்த ஜிஎஸ்டி வரிக் குறைப்பானது நடுத்தரக் குடும்பங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், ஏழைகள், பெண்கள், குழந்தைகள், விவசாயிகள் தங்களுக்குத் தேவையான பொருள்களை குறைந்த விலையிலேயே வாங்கலாம் என்றும் பேசினார்.
குறித்த வருமான வரி குறைப்பு மூலம் நடுத்தர மக்களுக்கு முதல் பரிசு கிடைத்துள்ளதாகவும், ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் தற்போது 02-வது பரிசு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார். இது நடுத்தர மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும் என்றும், 12% GST-இல் இருந்த 99% பொருட்கள், 5% GSTக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் பிரட், பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை நாளை முதல் குறையும் என்று காணொளியில் பேசினார்.
மேலும், சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் மக்களுக்குத் தேவையான பொருள்களைத் தயாரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், உள்நாட்டுப் பொருள்கள் சிறந்த தரத்துடன் தயாரிக்கப்பட வேண்டும் எனவும், அவை உலக தரத்துடன் போட்டிபோடும் வகையில் இருப்பது அவசியம் என்று சுட்டிக்காட்டினார்.
அத்துடன், உள்நாட்டுக் தயாரிப்புகளை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதன் மூலம் இந்தியா வேகமாக வளர்ச்சி அடையும் என்றும், சுதந்திரத்திற்குப் பிறகும் சுதேசி பயன்பாடுதான் பலனளித்தது என்றும், நாம் அனைவரும் இணைந்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே காணொளி மூலம் உரையாற்றினார்.
English Summary
PM Modi says GST tax cut will bring double happiness to middle class