பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு விடுத்த வேண்டுகோள்.! - Seithipunal
Seithipunal


கடந்த சில மாதங்களாக கட்டுப்பாட்டிலிருந்த கொரோனா நோய்த்தொற்று பரவல், தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. 

குறிப்பாக தலைநகர் டெல்லி, மகாராஷ்டிரா, மத்திய பிரதேஷ், பஞ்சப், கர்நாடகா, தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா நோய் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

உலகளவில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இதுவரை நாட்டில் ஒரு கோடியே 79 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது 9 லட்சத்து 10 ஆயிரம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி 37 நாட்களுக்குப்பின் இரண்டாவது கொரோனா தடுப்பூசியை தலைநகர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் போட்டுக்கொண்டார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

"இன்று காலை இரண்டாவது கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டேன். கொரோனாவை தோற்கடிப்பதற்கான வழிகளில் தடுப்புசி செலுத்துவதும் ஒரு வழிமுறையாகும். தகுதி உடைய அனைவரும் உங்களுக்கான தடுப்பூசியை விரைவில் எடுத்துக்கொள்ளுங்கள்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PM modi request to people for corona vaccine


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->