நாமக்கல் மாவட்ட மக்களின் மனதை குளிரவைத்த மோடி.. நெகிழ்ச்சி பேச்சு.!! - Seithipunal
Seithipunal


இந்திய பிரதமர் மோடி மாதத்தின் கடைசி ஞாயிறு கிழமைகளில் வானொலி மூலமாக " மன் கீ பாத் " நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். பிரதமர் மோடி பதவியேற்றத்தில் இருந்து இந்த "மன் கீ பாத் " நிகழ்ச்சி இருந்து வருகிறது.

ஜூலை 2020 மாதத்திற்கு இன்று கடைசி ஞாயிற்றுக்கிழமையாக அமைந்தது. அந்த வகையில், இன்று " மன் கீ பாத் " நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோடி, கொரோனா பாதிப்பு தொடர்பான விபரங்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண பணிகள், கார்கில் வெற்றி தினம் தொடர்பான தகவலை பேசியிருந்தார்.

இதில், மக்களுடன் கொண்ட உரையாடலில் தமிழகத்தில் உள்ள நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த மாணவி கனிகா தொடர்பாக பேசினார். இதில், நாமக்கல் என்றால் அனைவருக்கும் ஆஞ்சநேயர் கோவில் நினைவிற்கு வரும். இனி மாணவி கனிகா நியாபகத்திற்கு வருவார் என்று தெரிவித்தார். மேலும், மாணவி கனிகா சி.பி.எஸ்.சி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 490 மதிப்பெண்கள் எடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi address nation Maan Ki Path speech


கருத்துக் கணிப்பு

விவசாயிகளின் நண்பன் உண்மையில் யார்?.
கருத்துக் கணிப்பு

விவசாயிகளின் நண்பன் உண்மையில் யார்?.
Seithipunal