காதலால் வெடித்த விவகாரம்! 10ம் வகுப்பு மாணவிக்கு பிளஸ்-1 மாணவன் செய்த செயல் என்ன தெரியுமா? - Seithipunal
Seithipunal


கேரளா திருவனந்தபுரம் வெள்ளரடா பகுதியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை, பிளஸ்-1 படித்து வந்த மாணவன் ஒருவன் காதலித்துள்ளார்.ஆனால் அவரது காதலை மாணவி நிராகரித்ததால், பிளஸ்-1 மாணவன் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.

மேலும் மாணவியை மிரட்டி தனக்கு அடிபணிய வைத்துவிடலாம் என்று நினைத்து, மன்னம்கோட்டை பகுதியை சேர்ந்த ஆனந்து (20), சஜின்(30) ஆகிய இருவரையும் தனக்கு உதவுமாறு கேட்டுள்ளார்.

இதற்கு பதிலாக மதுபானம் மற்றும் விரும்பும் உணவு வாங்கித்தருவதாக பிளஸ்-1 மாணவன் தெரிவித்துருக்கிறான்.இதைத்தொடர்ந்து ஆனந்து மற்றும் சஜின் ஆகிய இருவரும் 10-ம் வகுப்பு மாணவியின் தாயின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

இதில், பிளஸ்-1 மாணவனை காதலிக்குமாறு 10-ம் வகுப்பு மாணவியை மிரட்டியுள்ளனர்.அதுமட்டுமின்றி பிளஸ்-1 மாணவனை மாணவிக்கு திருமணம் செய்து வைக்குமாறு மாணவியின் தாயையும் மிரட்டி இருக்கின்றனர்.

இதுகுறித்து வெள்ளரடா காவல் நிலையத்தில் மாணவியின் தாய் புகார் செய்ததன்பேரில் காவலர்கள், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதில் 10-ம் வகுப்பு மாணவி மற்றும் அவரது தாய்க்கு மிரட்டல் விடுத்த ஆனந்து, சஜின் ஆகிய 2 பேரையும் காவலர்கள் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Plus 1 student did 10th grade student because of love


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->