பெயர் திருத்தம் செய்யப் போகிறீர்களா? பான் கார்டு இனி உதவாது...! - புதிய அறிவிப்பு பரபரப்பு - Seithipunal
Seithipunal


இந்தியர்களின் அத்தியாவசிய அடையாள ஆவணமாக கருதப்படும் ஆதாரை, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வழங்கி வருகிறது. ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்ட எண்ணுடன் வழங்கப்படும் இந்த அடையாள அட்டையில், அவர்களின் புகைப்படம், பிறந்த தேதி, முகவரி போன்ற முக்கிய விவரங்கள் இடம்பெறும்.

இவற்றில் ஏதேனும் பிழை இருந்தால் பல்வேறு அரசு சேவைகளைப் பெறுவதில் சிக்கல்கள் உருவாகுவது வழக்கம். குறிப்பாக பெயரில் தவறு இருந்தால் அது பெரும் பிரச்சினையாக மாறுகிறது.

பெயர் திருத்தம் உள்ளிட்ட மாற்றங்களுக்கு, பல்வேறு ஆவணங்களை ஆதாரமாக UIDAI ஏற்றுக்கொண்டு வந்தது. அதில் மிகவும் பொதுவாக பயன்படுத்தப்பட்ட முக்கிய ஆவணங்களில் ஒன்று பான் கார்டு. பான் கார்டில் பெயர் மற்றும் தந்தைப் பெயர் தெளிவாக இடம்பெற்றிருப்பதால், அது ஆதார் திருத்தத்திற்கு நம்பத்தகுந்த அடையாள ஆவணமாக கருதப்பட்டது.

ஆனால் UIDAI சமீபத்தில் வெளியிட்டுள்ள புதிய பட்டியலில், பான் கார்டு ஆவணங்களின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இனி ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் அல்லது திருத்தத்திற்கு பான் கார்டை சமர்ப்பிக்க முடியாது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

planning change your name Your PAN card no longer useful new announcement causing stir


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->