மக்களே எச்சரிக்கை.! ஹெல்மெட் அணிந்திருந்தாலும் இதை செய்யாவிட்டால் அபராதம்.! - Seithipunal
Seithipunal


விபத்துக்கள் ஏற்படுவதற்கு வாகனங்களை அதிவேகமாக ஓட்டுவது, மது அருந்தி வாகனம் ஓட்டுவது என பல காரணங்கள் உள்ளன. இதில் கடந்த 2020ஆம் ஆண்டில் சாலை விபத்துகள் மூலமாக உயிரிழந்தவர்களில் 11 சதவீதம் விபத்துகள், சீட் பெல்ட் அணியாமல் சென்றதன் காரணமாக ஏற்பட்டுள்ளது.

ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதை முறைப்படி அணிய தவறினாலும் அபராதம் உண்டு என்பது பலருக்கும் தெரியாத தகவலாக உள்ளது. அதாவது ஹெல்மெட்டில் உள்ள ஸ்டிராப்-ஐ நீங்கள் முறையாக அணிந்திருக்க வேண்டும். 

ஸ்டிராப் போடாவிட்டால் அந்த பயணி ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட் அணிவதும் குற்றச் செயலாகும். கண்களை மறைக்கும் வகையில் கண்ணாடி இருக்க வேண்டும். பிஐஎஸ் சான்றிதழும் அவசியம்.

இதையடுத்து குழந்தைகளும் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். அப்படி குழந்தைகள் ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம்.

மேலும் குழந்தைகளுடன் செல்லும் இரு சக்கர வாகனங்கள் 40 கி.மீ. வேகத்தில் தான் பயணிக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் பட்சத்தில் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.

இதையடுத்து வாகனங்களில் மிக அதிகமான பாரம் ஏற்றிச் சென்றால் ரூ.20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். குறிப்பாக வாகன ஓட்டுநர் கூடுதலாக ரூ.2,000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். 

மேலும் சுமார் 30.1 சதவீத உயிரிழப்புகள் மற்றும் படுகாயம் ஏற்படுத்திய 26 சதவீத விபத்துகள் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் ஏற்பட்டதாகும். இதனால் மோட்டார் வாகன சட்டம் 1998 விதிகளை திருத்தம் செய்து, மேம்பட்ட விதிகளை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Penalty for not wearing helmet properly


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->