பறக்கும் விமானத்தில் ஊழியரைத் தாக்கிய பயணி - ஏர் இந்தியாவில் தொடரும் அசம்பாவிதம்.! - Seithipunal
Seithipunal


பறக்கும் விமானத்தில் ஊழியரைத் தாக்கிய பயணி - ஏர் இந்தியாவில் தொடரும் அசம்பாவிதம்.!

இந்தியாவில் சமீபகாலமாக விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் சக பயணிகள் மீது சிறுநீர் கழிப்பது, ஊழியர்களிடம் பயணிகள் அத்துமீறி நடந்துகொள்வது, அவர்களுடன் கைகலப்பில் ஈடுபடுவது உள்ளிட்ட செயல்கள் அரங்கேறிய வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் கோவாவில் இருந்து டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் விமான ஊழியரை சாராமரியாகத் தாக்கியுள்ளார். 

இதையடுத்து விமானம் டெல்லியை அடைந்ததும், விமான ஊழியர்கள் அந்த பயணியை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாவது:- "விமானத்தில் பயணம் செய்த ஒரு பயணி, ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், ஒரு ஊழியரை தாக்கியுள்ளார். 

இந்த விமானம் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகும், அந்த பயணி ஆக்ரோஷமாக நடந்துகொண்டார். அதனால், அவர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திடம் புகார் அளித்துள்ளோம். 

அதற்கு அவர்கள் "பயணிகளின் பாதுகாப்புடன் உங்கள் பணியாளர்களின் பாதுகாப்பும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது" என்று அவர் தெரிவித்தனர். சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் விதிகளின் படி, விமானத்தில் அத்துமீறி நடக்கும் பயணிக்கு, அவர் செய்த குற்றத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட காலத்திற்கு விமானத்தில் பறப்பதற்கு தடை விதிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

passenger attack flight employee in air india at midair


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->