டெல்லி வியாபாரிகள் தலையில் இடியை போட்ட தொடர் போராட்டங்கள்; ரூ.3,000 கோடி இழப்பு ; தீபாவளி வரை தொடர்ந்தால் ரூ.10,000 கோடியைத் தாண்டக்கூடும் என கணிப்பு..! - Seithipunal
Seithipunal


டெல்லியில் சிஜேப்பினர், எதிர்கட்சிகள் நடத்தும் தொடரும் போராட்டத்தால் வியாபாரிகளுக்கு இதுவரை ரூ.3,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தீபாவளிக்குள் இது ரூ.10,000 கோடியாக உயர வாய்ப்பிருப்பதாகவும் சேம்பர் ஆப் டிரேடர்ஸ் அண்ட் இண்டஸ்டிரி (சிடிஐ) அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

மத்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் டெல்லி போக்குவரத்துகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த இரண்டு வாரங்களாக நீடிக்கும் குறித்த போராட்டங்களால், தலைநகரின் வணிகச் சூழலை பாதித்து வருகிறது. இந்நிலையில், போராட்டங்கள் காரணமாக டெல்லி வியாபாரிகளுக்கு ரூ.3,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தீபாவளிக்குள் இது ரூ.10,000 கோடியை எட்டக்கூடும் என்றும் சிடிஐ மதிப்பிட்டுள்ளது.

இது குறித்து சிடிஐ தலைவர் பிரிஜேஷ் கோயக் கூறியுள்ளதாவது;
அக்டோபர் 10-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தால் மட்டும் சுமார் ரூ.2,000 கோடி வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அக்டோபர் 13 முதல் 16 ஆம் தேதி வரை கூடுதலாக சுமார் ரூ.1,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மத்திய டெல்லியில் மேற்கொள்ளப்பட்ட சாலை மறியல்கள், போக்குவரத்து சிக்கல்கள், மெட்ரோ சேவைகளில் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்டவையே இதற்குக் காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த போராட்டங்களால் டெல்லியின் சில்லறை வணிகச் சந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சதர் பஜார், சாந்தினி சவுக், காஷ்மீரி கேட், சாவ்ரி பஜார், பகீரத் பிளேஸ், காந்தி நகர், நயா பஜார், காரி பாவ்லி, கராவல் நகர், கரோல் பாக், லஜ்பத் ராய் மார்க்கெட் மற்றும் கன்னாட் பிளேஸ் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட சந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக  சிடிஐ தலைவர் பிரிஜேஷ் கோயக் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த இழப்பு தொடர்பாக சிஐடி மேலும் ஒரு புள்ளிவிவரத்தையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, சில்லறை வணிகம் ரூ. 1,800 கோடி, மொத்த வணிகம் மற்றும் வெளியூர் வாங்குபவர்கள் ரூ.600 கோடி, உணவு, தங்குமிடம் மற்றும் சேவைத் துறையில் ரூ.300 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், போக்குவரத்து, ஆட்டோ-டாக்ஸி மற்றும் சுற்றுலாவில் ரூ.180 கோடியும், முறைசாரா துறை, தினக்கூலித் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் சுமை தூக்கும் பணிகளில் ரூ.120 கோடியும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தொடர் போராட்டச் சூழலால் ஹோட்டல்கள், உணவகங்கள், திரையரங்குகள், அழகு நிலையங்கள், சலூன்கள், உடற்பயிற்சி கூடங்கள், கிளப்புகள், நடைபாதை வியாபாரிகள் மற்றும் தினக்கூலித் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக சிடிஐ புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய போராட்டங்கள் தீபாவளி வரை  தொடர்ந்தால், வணிக இழப்பு ரூ.10,000 கோடியைத் தாண்டக்கூடும் என்றும் சிஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது, பண்டிகைக் காலத்தில் வணிகம் தடையின்றி நடைபெற சிஐடி மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஒரு கோரிக்கையும் விடுத்துள்ளது.

அதில், வர்த்தகர்களுக்கு நிவாரணம் கிடைக்கவும், தீபாவளி முடியும் வரை மத்திய டெல்லி, புது தில்லி மற்றும் லுட்டியன்ஸ் மண்டலம் ஆகிய பகுதிகளில் போராட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ongoing protests in Delhi have caused a loss of Rs 3000 crore


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->