ஒரு வயது குழந்தையை துள்ளத்துடிக்க., தூக்கி வீசிய பெண்கள்.! காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்.!  - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் கிழக்கு கோதாவரி அருகே சின்ன கொண்டேபாடியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கு 18 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. சதீஷின் மனைவி ஸ்ரீ ஜனா பிரசவம் முடிந்து வீடு திரும்பிய பின்னர் அவருடைய தாய் மகாலட்சுமி மற்றும் பாட்டி கனகரத்தினம் உள்ளிட்டோர் தொடர்ந்து ஸ்ரீ ஜனாவிடம் சண்டையிட்டு வந்துள்ளனர். 

இந்த நிலையில் பெண் குழந்தை என்பதால் அதனை கொலை செய்ய மூன்று பேரும் சேர்ந்தே திட்டம் தீட்டி கடந்த 16ம் தேதி அருகில் உள்ள வீட்டில் கிணற்றில் குழந்தையை வீசி விட்டு யாரோ குழந்தையை கடத்தி சென்று விட்டதாக கூறி நாடகமாடி இருக்கின்றனர். குழந்தையின் தந்தை சதீஷும் இதனை நம்பி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

பின்னர் கிராம மக்கள் குழந்தை பிணமாக கிணற்றில் மிதப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

பெண் குழந்தை என்பதால் வீட்டில் இருந்த பெண்களே கிணற்றில் வீசி கொலை செய்தது காவல்துறையின் கிடுக்கிபிடி விசாரணையில் வெளிவந்துள்ளது.பின்னர் குற்றவாளிகள் மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one year girl murdered by her mother in anthra


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal