ரெயில் நிலையத்தில் சிக்கிய 1 கிலோ தங்கம் - தீவிர விசாரணையில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


அசாம் மாநிலம் கவுகாத்தி ரெயில் நிலையத்தில் ரூ.1.28 கோடி மதிப்பிலான 1.997 கிலோ எடை கொண்ட கடத்தல் தங்கம், சுங்க துறை அதிகாரிகளால் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து சுங்க இலாகா துறை அதிகாரிகள் பேசுகையில், இதற்கு முன், ரூ.43 லட்சம் மதிப்பிலான 24 கேரட் தங்க தூசு மற்றும் 24 கேரட் தங்க நகைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தோம் என்று தெரிவித்தனர். 

மேலும், இந்த தங்க நகைகளை துபாயில் இருந்து மும்பை நோக்கி வந்த இந்தியர் கடத்தி வந்துள்ளார். மும்பை விமான நிலையத்தில் வைத்து நடந்த சோதனையில் அவை பறிமுதல் செய்யப்பட்டன. சாக்லேட் பெட்டிகள் மற்றும் குழந்தைகளுக்கான பவுடர் அடங்கிய பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டு அவை கடத்தப்பட்டு இருந்தன என்றும் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one kg gold seized in assam railway station


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->