விமானத்தில் பணி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. முதியவர் கைது.! - Seithipunal
Seithipunal


விமானத்தில் பணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மரத்தினை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு மலேசியாவில் இருந்து விமானம் ஒன்று வந்துள்ளது. அந்த விமானத்தில் 33 வயதான பெண் பணி பெண்ணாக இருந்தார்.  அந்த பணிப்பெண்ணை விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவர் தனக்கு மதுபானம் வேண்டும் என கேட்டு உள்ளார்.

இதனையடுத்து அந்தப் பணிப்பெண்ணும் மதுபானத்தை அந்த நபரிடம் கொடுத்துள்ளார். இதனிடையே அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.மேலும் அந்த பெண்ணை அழகாக இருப்பதாகவும், 100 டாலர் கொடுப்பதாகவும் கூறி கையைப் பிடித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனையடுத்து விமானம் பெங்களூர் வந்து இறங்கியதும் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து விமான நிலைய போலீஸ் காவல் நிலையத்தில் பணிப்பெண் புகார் அளித்துள்ளார். அந்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாலியல் தொல்லை கொடுத்த நபரை கைது செய்தனர்.

அதை நபரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் மாலத்தீவை சேர்ந்த அக்ரம் அகமது (வயது 51) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Old harassment to aeroshosters


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->