அன்றே கணித்த பிரதமர் மோடி! வீடியோவை வைரலாக்கும் பாஜகவினர்! - Seithipunal
Seithipunal


ஆளும் மத்திய அரசுக்கு எதிராக இரண்டு நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ்கள் மக்களவையில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசிய காணொளி ஒன்றை, மத்திய அமைச்சர் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து உள்ளனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு எதிராக சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. அதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவளித்தன.

ஆனாலும், தீர்மானம் தோல்வியடைந்தது. இதை குறிப்பிட்டு தான் பிரதமர் நரேந்திர மோடி அந்த காணொளியில் பேசி உள்ளார்.

அந்த காணொளியில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய விவரம் : "கடந்த ஓராண்டுக்கு முன்பு (2018) எங்கள் அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. 

இதற்காக நாங்கள் எதிர்க்கட்சியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இதேபோல வருகின்ற 2023 ஆம் ஆண்டிலும் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரும் என்று நம்புகிறேன்" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

அப்போது எதிர்க்கட்சியை சேர்ந்த ஒருவர், "இது ஆணவப் பேச்சு" என்று பிரதமர் மோடியை நோக்கி குறள் எழுப்புகிறார். 

அதற்கு பிரதமர் நரேந்திர மோடி, "காங்கிரஸ் கட்சியின் ஆணவப் போக்கால் தான், அந்த கட்சி தற்போது 400 எம்பிக்களில் இருந்து 40 ஆக குறைந்து விட்டது. சேவை மனப்பான்மை கொண்ட பாஜகவோ இரண்டாவது இடத்திலிருந்து ஆட்சி செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளது" என்று பிரதமர் மோடி பதிலடி கொடுக்கிறார்.

பிரதமர் பேசும் இந்த காணொளியை "இப்படித்தான் நடக்கும் என்று கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பே கணித்து விட்டார் பிரதமர் மோடி" என்று தலைப்பிட்டு பாஜகவினர் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

No Confidence Motion PMModi 2019 speech


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->