வங்கிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட நிர்மலா சீதாராமன் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் உள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்ற நிலையில், நேற்று நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, சிறிய அளவில் கடன் பெற்றவர்கள், அதை திருப்பி செலுத்த முடியாதநிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

இந்தக் கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் பேசியதாவது, "கடனை திருப்பி செலுத்த முடியாதவர்கள் மீது சில வங்கிகள் இரக்கமற்ற வகையிலான நடவடிக்கைகளை எடுப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
,
அதனால், கடனை திருப்பி செலுத்தாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என்று மத்திய அரசு, அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் என்று அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. 

மேலும், இந்தப் பிரச்சினையை மனிதாபிமானத்துடனும், உணர்வுபூர்வமாகவும் அணுக வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

no action take to defaulters for no repayment loan minister nirmala seetharaman order


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->