பள்ளி கழிவறையில் பிறந்த ஆண் குழந்தை - ரத்த வெள்ளத்தில் கிடந்த 9 ஆம் வகுப்பு மாணவி.!!
nineth class student birth baby in school toilet at karnataga
கர்நாடக மாநிலத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் கழிப்பறையில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள யாத்கிர் மாவட்டம் ஷாஹாபூரில் அமைந்துள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு மாணவி, நேற்று முன்தினம் மாலை பள்ளி கழிப்பறைக்கு சென்றார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால், வார்டன் சந்தேகமடைந்து கழிவறைக்குச் சென்று பார்த்துள்ளார்.
அப்போது சிறுமி, ரத்த வெள்ளத்தில், ஆண் குழந்தை பிறந்த நிலையில் மயங்கி கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக மாணவி மற்றும் குழந்தையை மீட்டு ஷாஹாபூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு இருவரும் சிகிச்சையில் உள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து கர்நாடக மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் படி ஆணையத்தின் தலைவர் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தார். அதன் பின்னர் அவர் தெரிவித்ததாவது:- “பள்ளி முதல்வர் சம்பவத்தை மறைத்துவைத்தார். ரகசிய தகவல் மூலம் நாங்களே விசாரணை தொடங்கினோம்.
முதல்வர் உட்பட பள்ளி ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானாரா என்பது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடையோருக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சிறுமிக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் மாதந்தோறும் பரிசோதனை செய்வார்கள்,” என்றுத் தெரிவித்தார். இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
nineth class student birth baby in school toilet at karnataga