செய்தி வாசிப்பாளருக்கு, நேரலையில் காத்திருந்த சர்ப்ரைஸ்.! நெகிழ்ச்சி #வீடியோ..!  ​ - Seithipunal
Seithipunal


தான் விருது பெற்றது குறித்த Breaking NEWS-ஐ தானே வாசித்து இன்ப அதிர்ச்சியடைந்தார் கேரளாவை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் ஒருவர். 

கேரளாவில் மாத்ருபூமி என்ற பிரபல தொலைக்காட்சி இயங்கி வருகின்றது. இந்த தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியராக ஸ்ரீஜா ஷியாம் என்பவர் இருக்கின்றார். இவர் நேற்று காலை வழக்கம்போல செய்திகளை வாசித்து கொண்டே இருந்தார். 

அப்போது செய்திகளுக்கு நடுவே பிரேக்கிங் நியூஸ் ஒன்று வந்தது. அந்த செய்தியில் கேரள அரசின் சிறந்த செய்தி தொகுப்பாளர் என்ற விருதை செய்தியாளரான ஸ்ரீஜா ஷியாம்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி வெளியாகியது. அப்போது அவரின் புகைப்படமும் அதில் தோன்றியது.

இதை பார்த்து அவரால் சில வினாடிகள் பேச முடியாமல் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகினார். தனக்கு மாநில அரசின் விருது கிடைத்திருப்பதை தானே மகிழ்ச்சியுடன் அறிவித்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரல் ஆகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

news reader got surprise on live


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->