மது விற்பனையில் புதிய வியூகம்...! - போதை அளவை கணக்கிட்டு வரி வசூலிக்கும் கர்நாடக அரசு...!
New strategy liquor sales Karnataka government collect tax by calculating level intoxication
கர்நாடகம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, மதுபான விலைகள் கட்டுக்கட்டாக உயர்ந்து வருவது குடிமக்களிடையே பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அரசின் 5 உத்தரவாத திட்டங்களுக்கு தேவையான நிதியை ஈட்டும் நோக்கில் இந்த விலை உயர்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு மதுபான பயனாளர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்த நிலையில், 2026–27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வர் சித்தராமையா, நாடு முழுவதும் முதன்முறையாக மதுபானங்களில் உள்ள ஆல்கஹால் அளவை அடிப்படையாகக் கொண்டு வரி விதிக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்த ‘ஆல்கஹால் அடிப்படையிலான வரி அமைப்பு’ விரைவில் அமலுக்கு வரும் வகையில் அரசு அரசாணை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய வரி அமைப்பு நடைமுறைக்கு வந்தவுடன், மதுபானங்களின் விலை சுமார் 20 சதவீதம் வரை உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குறைந்த விலை மதுபானங்கள் அதிகமாக பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
180 மில்லி அளவிலான மதுபானங்களின் விலை ரூ.80-இல் இருந்து ரூ.95 வரை உயர்த்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.இதனுடன், பிற வகை மதுபானங்களின் விலைகளும் ரூ.5 முதல் ரூ.10 வரை உயர வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆல்கஹால் அளவை மையமாகக் கொண்டு வரி விதிக்கும் இந்த முறை, இந்தியாவில் முதன்முறையாக கர்நாடகத்தில் அமல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்க மாற்றமாக பார்க்கப்படுகிறது.
English Summary
New strategy liquor sales Karnataka government collect tax by calculating level intoxication